TNAHD Tirunelveli Recruitment 2023 12 வகுப்பு படித்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் Veterinary Inspector பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
12 வகுப்பு படித்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் Veterinary Inspector பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

TNAHD Tirunelveli Recruitment 2023
12 வகுப்பு படித்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள Veterinary Inspector பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் காலியாகவுள்ள 583 கால்நடை ஆய்வாளர் நிலை -2 பயிற்சிக்கு தகுதியான நபர்களை ஆட்தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களை பயிற்சிக்கு பின்னர் கால்நடை ஆய்வாளர் நிலை -2 ஆக பணியமர்த்தப்படவுள்ளனர். முன்னாள் படைவீரர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 31 பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளது.
இப்பணியிடத்திற்கு +2 தேர்ச்சி பெற்று 55 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் திருநெல்வேலி அவர்களிடமிருந்து விண்ணப்ப படிவம் பெற்று படிவத்தினை பூர்த்தி செய்து ahdlisvls@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும்,
மேலும் இயக்குநர், இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள், கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், 571 அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35.என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பிவைத்து, அவ்விண்ணப்பத்தின் மற்றொரு பிரதியுடன் +2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் முன்னாள் படைவீரர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றினை இணைத்து திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.12.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் திரு.சி.இராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க:-
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2023/12/2023121578.pdf