lifestyleTamilNadu News

chennai photo competition ஜன்னல் சீட் வழியாக சென்னை என்ற தலைப்பில் புகைப்பட போட்டி ரூ25000 மதிப்புள்ள பரிசு முழு விவரம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள புகைப்பட போட்டி

ஜன்னல் சீட் வழியாக சென்னை என்ற தலைப்பில் புகைப்பட போட்டி ரூ25000 மதிப்புள்ள பரிசு முழு விவரம் 

‘ஜன்னல் சீட் வழியாக சென்னை’ என்ற புகைப்பட போட்டி குறித்த அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.சிறந்த புகைப்படங்களுக்கு 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட உள்ளது 

chennai photo competition
chennai photo competition

சென்னை மாநகர பேருந்துகளின் நாம் பயண செய்யும் போது பரபரப்பான நேரத்தில் ஜன்னலிலிருந்து நாம்  காணும் காட்சிகள் , பரபரப்பான நேரத்தில் அழகான பயணங்களின் போது ஜன்னல் வழியே நாம் பார்க்கு   சென்னையின் மறைந்திருக்கும் அழகினை புகைப்படங்கள் வழியாக  வெளிக்காட்டலாம்.

தினசரி சென்னை மாநகர பேருந்துகளில் பயண வாழ்க்கை, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களின்  தொழில் அர்ப்பணிப்பு போன்றவற்றையும் கருப்பொருளாக வைத்து காட்சிப்படுத்தலாம்.

சென்னை மாநகரம் பற்றிய  உங்களின்  பார்வை, உணர்ச்சிகள் மற்றும் மாநகர பேருந்துடன் உங்களுக்கு இருக்கும்  இணைப்பை புகைப்படமாக எடுக்கலாம்.

மேலும் நீங்கள் எடுத்த புகைப்படம் பற்றி 50 வார்த்தைகளுக்கு மிகாமல் விவரித்து கூறி எழுதி அனுப்பவும் . 

புகைப்படத்தை அனுப்பவேண்டிய முறை:

ஆன்லைன்

போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 15 இருக்க வேண்டும்

புகைப்படத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்:

15/8/2024

இப்போட்டியில் வெற்றியாளர்களை 22/8/2024 அன்று சமூக வலைத்தளம் மூலம் அறிவிக்கப்படுவார்கள் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நீங்கள் எடுத்த புகைப்படத்தை சமர்ப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

bit.ly/jannalseatphoto என்ற இந்த லிங்கை க்ளிக் செய்து அதில்

-உங்களின் பெயர்,

-விலாசம்,

-இமெயில் முகவரி,

-சமூக வலைத்தள கணக்கு விவரம், 

-தொலைபேசி எண் மற்றும்

-நீங்கள் எடுத்த புகைப்படம் குறித்து சிறு குறிப்பை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

=மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் #PolaamRight என்ற ஹேஷ்டேக்குடன் உங்களின் புகைப்படங்களையும் பகிருங்கள்.

மேலும் விவரங்களுக்கு

mtcpolaamright@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

chennai photo competition

Related Articles

Back to top button