wife asked divorce for 10 rs lipstick 10 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கி தராததால் விவாகரத்து கேட்ட மனைவி
10 ரூபாய் லிப்ஸ்டிக்கில் தொடங்கிய சண்டை விவாகரத்து வரை சென்ற விவகாரம்

wife asked divorce for 10 rs lipstick 10 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கி தராததால் விவாகரத்து கேட்ட மனைவி 10 ரூபாய் லிப்ஸ்டிக்கில் தொடங்கிய சண்டை விவாகரத்து வரை சென்ற- விவகாரம்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை, செர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடம் ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.ஆனால், கணவர் பல கடைகளில் தேடியும் 10 ரூபாய் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. அதனால், 10 ரூபாய் லிப்ஸ்டிக்கு பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கி வந்துள்ளார்.

இதை பார்த்து கோபமடைந்த மனைவி, 10 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்காமல், ஏன் 30 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கினீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பின் கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று , அங்கு உள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் குடும்ப ஆலோசனை மையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்த குடும்ப நல ஆலோசகரிடம் அந்த பெண் , “என் கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை. குழந்தைகளுக்காகச் சேமிக்கும் எந்த எண்ணமும் அவருக்கு இல்லை என்றும் , 10 ரூபாய் லிப்ஸ்டிக்கு பதிலாக 30 ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறினார். அதர்க்கு எங்கு தேடியும் 10 ரூபாய் விலையில் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என்று கணவர் கூறியுள்ளார்.
இதிலிருந்து அவர்களின் பிரச்சனை லிப்ஸ்டிக் அல்ல, அதிக செலவு செய்தது தான் என்பதை உணர்ந்த குடும்ப நல ஆலோசகர் இருவரிடமும் நிலைமையை எடுத்து கூறி, சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. 10 ரூபாய் லிப்ஸ்டிக்கில் தொடங்கிய சண்டை விவாகரத்து வரை சென்றது ஆச்சரியமாக தான் உள்ளது.