women seeks divorce for Kurkure குர்குரே வாங்க மறந்த கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி முழு விபரம்

women seeks divorce for Kurkure குர்குரே வாங்க மறந்த கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி முழு விபரம்
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் தனது கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. 5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராத காரணத்தால் கணவனிடம் இருந்து அவரின் மனைவி விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை தினமும் ரூ.5 மதிப்புள்ள குர்குரே பாக்கெட் வாங்கிவர கூறியுள்ளார்.ஒருநாள் கணவர் வாங்கி வர மறந்த நிலையில், கோபமடைந்த மனைவி, வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் விவாகரத்து கோரி தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. தினமும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் தனது மனைவி குர்குரேவுக்கு அடிமையாகி வருவது கவலையளிப்பதாக கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவியோ மாறாக, கணவர் தன்னை அடிப்பதால், தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.