5 year old dies of heart attack அதிர்ச்சி 5 வயது சிறுமி மாரடைப்பால் பலி முழு விவரம்
மொபைலில் கார்டூன் பார்த்த 5 வயது சிறுமி மாரடைப்பால் பலி
5 year old dies of heart attack உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வீட்டில் செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமினி(5). நேற்று முன் தினம் தனது தாயாரின் அருகில், படுத்தபடியே செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த காமினி திடிரென எவ்வித அசைவுமின்றி காமினி படுத்திருப்பதை கண்டு அலறியடித்தப்படியே காமினியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

காமினியை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடும் குளிர் காரணமாக ஆக்சிஜன் அளவுகள் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை குறைவதால் இது போன்ற மாரடைப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.