andhra train accident ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து 10 பேர் பலி
ஆந்திராவில் நின்றிருந்த ரயிலில் மோதிய விரைவு ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் நின்றிருந்த ரயிலில் மோதிய விரைவு ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.

இந்த ரயில் விபத்தில் ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
கண்டகப்பள்ளியில் பிரேக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணி ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.