begging Woman earns 2.5 lakhs per month பிச்சை எடுத்து மாதம் 2.5 லட்சம் சம்பதிக்கும் பெண் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் முழு விவரம்
பிச்சை எடுத்து மாதம் 2.5 லட்சம் சம்பதிக்கும் பெண் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் முழு விவரம்
இந்தூரில் 22 பேர் கொண்ட பிச்சைக்காரர் கும்பல் ஒன்று பகல் முழுதும் தெருக்களில் பிச்சை எடுத்து இரவில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது , பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தானில் இருந்து இந்தூருக்கு வந்த 22 பேர் கொண்ட கும்பல் ஒன்று உஜ்ஜைனில் தங்கி பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்ற தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர், காவல் துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ராஜஸ்தானில் இருந்து 22 பேர் கொண்ட குழு பிச்சை எடுப்பதற்காக இந்தூருக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவில் மொத்தம் 11 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் இருப்பதாகவும் . இவர்கள் பகல் முழுவதும் நகரத்தில் பல்வேறு சாலைகளில் பிச்சை எடுப்பதும் இரவில் தூங்குவதற்காக ஸ்டார் ஓட்டலுக்கு வருகின்றனர்.
உஜ்ஜைன் சாலையில் லவ்குஷ் ஜங்ஷனில் அந்த கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது, தனது வீடு ராஜஸ்தானில் இருப்பதாகவும் பிச்சை எடுத்து ஒரு மாதத்தில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்ததாகவும், அந்த பணத்தில் தனது மாமியாகுக்கு மாதம் ரூ.1 லட்சம் அனுப்புவதாகவும் கூறினார் மேலும் அந்த பெண்ணிடம் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் உள்பட ராஜஸ்தானில் நிலம், அடுக்கு மாடி வீடு, பைக், போன்ற ஏராளமான சொத்துகள் இருப்பது தெரியவந்தது.
The Ministry of Social Justice and Empowerment சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்தூர் மற்றும் முக்கிய 9 நகரங்களை பிச்சை எடுப்பதில் இருந்து விடுவிக்கும் நோக்கத்டில் இந்தூர் நிர்வாகம் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.
மேலும், இந்தூர் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல், லாட்ஜ், மற்றும் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் பிச்சைக்காரர்களை தங்க அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர் மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தானில் உள்ள அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
begging Woman earns 2.5 lakhs per month
தனது சிறுநீர் கலந்து உணவு சமைத்த பணிப்பெண் கைது வைரல் வீடியோ