NATIONAL NEWS

Cricket World Cup தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி முழு விபரம்

தொடர்சியாக 6 வெற்றி பெற்ற இந்திய அணி

இந்திய அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 6 ஆவது வெற்றியை பதிவு செய்ததோடு, அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல், உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து 4 ஆட்டங்களில் தொடா்ந்து தோற்றதும் இதுவே முதல் முறையாகும் இந்தியா, 6 தொடா் வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வர, 5-ஆவது தோல்வியுடன் பட்டியலின் கடைசி இடத்துக்கு மீண்டும் தள்ளப்பட்டது இங்கிலாந்து.

தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி
தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில், தொடர்ச்சியான 6 வெற்றிகளுடன் இந்திய அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பையில் தொடர்ச்சியான 6 வெற்றிகளுடன், இதுவரை தோற்காத அணியாக வலம் வருகிறது.

இந்திய அணி சென்னையில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்திய அணி டெல்லியில் நடைபெற்ற தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி அகமதாபாத்தில் நடைபெற்ற தனது 3 ஆவது போட்டியில், பாகிஸ்தானை எதிர்கொண்டது. 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்திய அணி 4 ஆவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்த போட்டியில், விராட் கோலியின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி தனது 5 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. ரோகித் மற்றும் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது.

இந்திய அணி தனது 6 வது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறித்தது

தொடர்ச்சியாக 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. 12 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது

Related Articles

Back to top button