NATIONAL NEWS
flood in coaching center delhi டெல்லியில் தனியார் IAS பயிற்சி மையத்தில் மழைவெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த சோகம்

டெல்லியில் தனியார் IAS பயிற்சி மையத்தில் மழைவெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த சோகம்
டெல்லியில் உள்ள ஒரு தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைதண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தர்போது பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள ஒரு தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளம் மழைநீரில் மூழ்கியது.
பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கினர்.இதில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் 1 மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது