gpay sachet loan மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம் கூகுள் பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு
google pay loan மாத தவனை 111 மட்டுமே கூகுள் பே லோன் முழு விவரம்
மாதம் 111 ரூபாய் இ.எம்.ஐ செலுத்தும் கடன் திட்டம் கூகுள் பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்பொழுது வங்கிகள் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தொகையை கடனாக பெற்று பயன்படுத்தி வருகின்றனர். அந்த கடனுக்கு வட்டியுடன். சேர்த்து அசல் தலையில் சிறிய பகுதியையும் அவர்கள் மாதம் மாதம் கட்டும் வகையில் வங்கிகள் கடன் அளித்து வருகின்றன.இந்நிலையில் உலகின் மிக பிரபலமான கூகுள் நிறுவனம் தற்போது புதிய கடன் சேவை ஒன்றை அறிவித்துள்ளது.
அதாவது கூகுள் பே செயலி மூலம் மிகவும் சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.குறித்த கடன் தொகையானது சாசெட் கடன்கள்(sachet) என அழைக்கப்படுகிறது.
அத்தியாவசிய தேவைகள் ஏற்படும் பொது ஒவ்வொருவரிடமும் கடன் கேட்க முடியாது எனவேதான் சிறு வணிக முதலாளிகளுக்கு ரூபாய் 15000 வரை இந்த சிறு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த கடன் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த கடன் தொகையை வெறும் 111 ருபாய் என்ற சிறிய தொகையில் திருப்பி செலுத்தலாம் .
இந்த திட்டத்தினை இ பே லேட்டேர் (ePayLater)உடன் இணைந்து கூகுள் பே(google pay) வாயிலாக செயல்படுத்த உள்ளது. சாக்கெட் லோன்(Sachet Loan) என்ற திட்டத்தில் இந்த வகையில் வணிகர்கள், பயனர்கள் அனைவரும் 15000 ரூபாய் முதல் 100000 லட்சம் ரூபாய் வரை லோன் பெறலாம்.அவ்வாறு சாத்கெட் லோன் திட்டத்தின் அடிப்படையில் வாங்கும் லோன் தொகையை மாதம் 111 ரூபாய் என்று இ.எம்.ஐ முறையில் செலுத்தி அடைக்கலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது.
கூகுள் அதிகாரபூர்வ அறிவிப்பு பார்க்க:-
https://twitter.com/GoogleIndia/status/1714894465922416979/photo/1

முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வரிகளை அங்கீகரித்துள்ளது. அதாவது, UPI அமைப்பைப் பயன்படுத்தும் தனிநபர்களுக்கு முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன் மூலம் வங்கிகள் பணம் செலுத்த முடியும். RBI இன் முடிவு UPI கட்டண முறையின் நோக்கத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 75% சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளை கையாளும் ஒரு வலுவான தளம் UPI ஆகும். UPI ஆனது சேமிப்புக் கணக்குகள், ஓவர் டிராஃப்ட் கணக்குகள், ப்ரீபெய்ட் வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் இணைக்க முடியும்.தனிநபர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க RBI அனுமதித்துள்ளது.
கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். உங்களது வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் கிரெடிட் தொகையினை செலவு செய்யலாம்.
UPI மூலம் வங்கிகளில் முன் அனுமதி பெற்ற கடன் வரிகளின் செயல்பாடு’ என்ற சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.”இந்த வசதியின் கீழ், தனிப்பட்ட வாடிக்கையாளரின் முன் அனுமதியுடன் தனிநபர்களுக்கு திட்டமிடப்பட்ட வணிக வங்கியால் வழங்கப்பட்ட முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன் மூலம் பணம் செலுத்துதல், UPI அமைப்பைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளுக்கு செயல்படுத்தப்படுகிறது” என்று RBI தெரிவித்துள்ளது
அதாவது பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கடன் பெற்று யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். வங்கிகள் இந்த முறையின் கீழ் கடன் வழங்க ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளதாக செப். 4-ம் (நேற்று) தேதி வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
