hajj application 2024 ஹஜ் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரங்கள் இதோ
how to apply for hajj 2024 ஹஜ் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

hajj application 2024
ஹஜ்-2024-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2024-ற்காக விண்ணப்பிக்கும் முறை 04.12.2023 முதல் ஆன்லைனில் தொடங்கி, 20.12.2023 அன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in “HAJ SUVIDHA” செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். ஹஜ் 2024-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்.
இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னனியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது.
குறைந்த பட்சம் 31.01.2025 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் (Online) மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்க்கான கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
20.12.2023
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
https://www.hajcommittee.gov.in/
ஹஜ் செல்ல ஆன்லைன் மூலம் எப்படி விண்னப்பிபது தெரிந்து கொள்ள
