Hanuman’s role dies of heart attack during Ramlila in Haryana ஹரியானாவில் ஹனுமானக நடித்தவர் மேடையிலேயே சுருண்டு விழுந்து பலி வைரல் வீடியோ
ராம் லீலா நிகழ்ச்சியில் ஹனுமானக நடித்தவர் மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்
Hanuman’s role dies of heart attack during Ramlila in Haryana உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் நேற்று(22.1.2024) திறப்பு விழா நடைபெற்றது. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம்லீலா நிகழ்ச்சி மற்றும் ராமர் பஜனைகள் நடைபெற்றது. நாடு முழுவதும் பலரும் கோவில்களில் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். மேலும் பஜனை, அன்னதானம் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ராமர், லட்சுமனன், சீதா ஆகியோரின் வேடங்களை அணிந்து மூன்று பேர் நிற்க, ராம பக்தராக கருதப்படும் அனுமன் வேடத்தை மேடை கலைஞரான கலைஞர் ஹரிஷ் மேத்தா ஏற்றிருந்தார். ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார்,
ஆனால் அங்கிருந்தவர்கள் இது நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் அவரை காப்பாற்ற முன்வராத நிலையில், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காமல் இருப்பபதால் அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்!

அனுமனாக நடித்துக்கொண்டிருந்தவர் கீழே விழுந்தபோது, நடிப்பதாக நினைத்துக்கொண்டு யாரும் உதவ முன்வராததும், நிகழ்ச்சியின்போதே அனுமனாக அவர் உயிரிழந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க:-
अयोध्या में श्रीराम मंदिर में प्राण प्रतिष्ठा महोत्सव के तहत भिवानी के जैन चौक क्षेत्र में चल रही रामलीला में हनुमान का रोल निभाते हुए सेवानिवृत्त जेई हरीश कुमार की हार्टअटैक के चलते मौत हो गई।
Cc:@punjabkesari#Ayodhya #ShriRam #Bhiwani #RamMandir #AyodhyaSriRamTemple pic.twitter.com/6tKLV7ejrd
— iMayankofficial 🇮🇳 (@imayankindian) January 22, 2024