Kolkata Man Climbs Down Bridge After Cops Promise Him Biryani & Job
பிரியாணி கொடுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார்
Kolkata Man Climbs Down Bridge After Cops Promise Him Biryani & Job பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் தனது மனைவியையும், பிசினஸையும் இழந்ததால் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.
அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று வண்டியை நிறுத்தி மேம்பாலத்தின் மேல் இருந்து குதிக்க முயற்சித்திருக்கிறார், உடனடியாக அங்கிருந்த காவலர் அவரிடம் பேச்சு கொடுத்து சமாதன படுத்த தொடங்கினார் மேலும் பேரிடர் மேலாண்மை குழு (டிஎம்ஜி) மற்றும் தீயணைப்புத் துறையின் பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தார்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவருடன் பேச ஆரம்பித்த குழுவினர் வேலை வாங்கி தருவதாக கூறியதுடன், மேலும் பிரியாணி பாக்கெட்டை காட்டி அவரிடம் பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்திருக்கின்றார்கள்
இது குறித்து கராயா நிலைய போலீஸ் அதிகாரி கூறுகையில் அவர், தனது மனைவியைப் பிரிந்ததைத் தொடர்ந்து கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார் மற்றும் அவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே நேரத்தில் நிதி நெருக்கடியில் உள்ளார் அவருக்கு வேலை வாங்கி தருகின்றோம் என உறுதி அளித்தோம் மேலும் மதியம் நேரம் என்பதால் பிரியாணி சாப்பிடலாம் என கூறி அவரை சமாதனபடுத்தினோம் என கூறினார்