Mamata Banerjee suffers major injury admitted to hospital மம்தா பானர்ஜி ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி! என்ன நடந்தது
Mamata Banerjee suffers major injury admitted to hospital மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி! என்ன நடந்தது
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில், தற்போது விபத்து காரணமாக மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி விபத்துக்குள்ளானார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. வீட்டில் இருந்த அவர் காயம் ஏற்பட்டதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

தற்போது அம்மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. 2026ல் அங்கு மாநில பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது நெற்றியில் இரத்தம் வழிகிற படங்கள் வெளியாகியுள்ளது.
காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளதை படங்கள் காட்டுகின்றன.அவர் வீட்டில் காயமுற்றதாகவும் கல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் விபத்து எப்படி நடந்தது என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை
திரினாமுல் காங்கிரஸ் கட்சி டிவிட்டர் பக்கத்தில் நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திரினாமுல் காங்கிரஸ் கட்சி டிவிட்டர் பதிவு பார்க்க