parag desai dies attack by street dogs தெரு நாய் கடித்து இறந்த தொழிலதிபர் முழு விவரம்
Parag Desai, owner of Wagh Bakri தெரு நாய் கடித்து உயிரிழந்த கோடீஸ்வரர்
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் பிரபல தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 49 வயதான இவருக்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர்

அக்டோபர் 15 ஆம் தேதி காலை வாக்கிங் சென்ற இவரை நாய் துரத்தி துரத்தி கடித்து உள்ளது. தெருநாய்கள் சேர்ந்து இவரை கொடூரமாக கடித்து உள்ளது. படுகாயங்களுடன் விழுந்து கிடந்த அவரை கண்ட பாதுகாவலர்கள் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு பக்கம் நாய் கடி காரணமாக அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு அது ஆறாமல் இருந்தது. இன்னொரு பக்கம் தலையில் ரத்தம் உறைந்து மூளை பாதிக்கப்பட்டு இருந்தது. மூளையில் ரத்த கசிவு அவருக்கு மோசமானது. இதையடுத்து ஏழு நாட்கள் வென்டிலேட்டரில் இருந்த தேசாய் அக்டோபர் 22 அன்று அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்

பராக் தேசாய் வாக் பிரபல பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ராசேஷ் தேசாய் என்பவரின் மகன் ஆவார். . இந்நிறுவனம் ₹1,500 கோடிக்கு மேல் கடந்த வருடம் வருவாய் ஈட்டியது. அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.