Pradhan Mantri Shram Yogi Maan dhan Scheme கூலி தொழிலாளர்களுக்கு பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம்
கூலி தொழிலாளர்களுக்கு பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம்
பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அரசு திட்டமாகும். இந்தியாவில் லட்சக்கணக்கான , தச்சர்கள், கூலி தொழிலாளர்கள், மற்றும் சிறு தொழில் புரிபவர்கள் போன்ற தினக்கூலிகள் அன்றாடம் உழைத்து வரும் நிலையில் , அவர்களின் முதியவயதில் வருமானமின்றி வாழ்வது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு நிதி பாதுகாப்பு எற்ப்படுத்தும் வகையில் , இந்திய அரசு ‘பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன்'(PMSYM) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் Pradhan Mantri Shram Yogi Maan dhan Scheme
இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். இது, 18 முதல் 40 வயதுக்குள் உள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 வரை ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
இத்திட்டம் குறைந்த கூலியில் பணிபுரிபவர்களுக்கு, அவர்கள் 60 வயதை அடைந்ததும், சீரான மாத வருமானத்தை உறுதிப்படுத்துகிறது.
இத்திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்:
18 முதல் 40 வயதிற்குள் உள்ள அனைவரும் சேரலாம்.
வருமானம்:
மாதம் ரூ.15,000 கீழ் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் சேர தகுதி உண்டு.
முக்கிய ஆவணங்கள்:
ஆதார் எண்,
வங்கி சேமிப்பு கணக்கு,
மற்றும் செல்லுபடியாகும் மொபைல் எண்
இத்திட்டத்தில் இணையும் முறை:
அருகிலுள்ள பொதுத்துறை வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்டபொது சேவை மையத்தில் (CSC) விண்ணப்பிக்கலாம்.
கிடைக்கும் பயன்கள்:
60 வயதிற்கு பிறகு, இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.3,000 வரை ஓய்வூதியம் பெறலாம். தொழிலாளர் செலுத்தும் தொகைக்கு இணையாக அரசு பங்களிப்பும் செய்யப்படும். இதன் மூலம் முதியவர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும். குறைந்தபட்சம் மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை இத்திட்டத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும். செலுத்தபடும் தொகைக்கு எதிராக அரசு தன் பங்களிப்பை செய்யும்.
*தினக்கூலியாக வேலை பார்த்து முதியவயதில் ஓய்வூதியம் கிடைக்கச் செய்யும் இந்த பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம், குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு நல்ல திட்டமாகும்
Pradhan Mantri Shram Yogi Maan dhan Scheme
post office insurance scheme