Prime Minister narendra modi flies in Tejas fighter jet தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி வைரல் வீடியோ
Modi becomes first Prime Minister to fly LCA Tejas தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
Prime Minister narendra modi flies in Tejas fighter jet தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி வைரல் வீடியோ
இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.
பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை(எச்ஏஎல்) மையத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி பெங்களூரு வந்தார். அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிட்ட அவர் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்வதற்கான கவச உடை, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து பயணம் மேற்கொண்டார்.

இந்திய விமானப்படையின் எச்ஏஎல் தேஜஸ் விமானம் ‘லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட்’ (LCA) என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் இந்த தேஜஸ் போர் விமானம் போர் கப்பல்களிலிருந்த இயங்கும் திறன் கொண்டது. இந்த வகை விமானங்கள் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.
இந்த விமானம் முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு தேஜஸ் என பெயரிட்டார். இந்த வகை விமானங்களையும், அதற்கு தேவையான உதிரி பாகங்கள், எந்திரங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.

இதுதொடர்பான தனது டிவிட்டர் பதிவில்,
தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு என்னை செழுமைப்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை தயாரித்து வடிவமைத்து வருகிறது.
இந்நிலையில், 12 Su-30MKI ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது தான், பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
सशक्त, समृद्ध एवं आत्मनिर्भर भारत की उड़ान…#Tejas pic.twitter.com/jGTtrFlCVC
— Sambit Patra (@sambitswaraj) November 25, 2023
