prime minister narendra Modi Performs Magic Trick குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய பிரதமர் மோடி வைரல் வீடியோ
PM Modi magic trick for kids குழந்தைகளுடன் மேஜிக் செய்த மோடி வீடியோ
prime minister narendra Modi Performs Magic Trick குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய பிரதமர் மோடி வைரல் வீடியோ
PM Modi performs coin trick for children பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தில் தம்மைச் சந்திக்க குழந்தைகளுடன் விளையாடி மேஜிக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது வைரல் ஆகும் வீடியோவில் ஒரு சிறுவன், மற்றும் ஒரு சிறுமி உள்ளார்கள், அதில் சிறுவனின் காதுகளை இழுத்து அவர்களுடன் விளையாடும் பிரதமர் மோடி, பின்னர் அந்த குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் வகையில், காசு ஒன்றை வைத்து மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி செய்யும் மேஜிக்கில் அவரது நெற்றியில் ஒரு நாணயத்தை வைத்து தலையை பின்னால் தட்டுகின்றார் அபோது அந்த நாணயம் மோடியின் கையில் வருகின்றது அதேபோல் அந்த குழந்தைகளுக்கும் செய்கின்றார் பின்னர் பிரதமர் குழந்தைகளின் நெற்றியில் நாணயத்தை ஒட்டச் செல்கிறார், ஆனால் அது அவர்களின் தலையில் தட்டப்பட்டவுடன் மறைந்துவிடுவது போல் செய்கின்றார்

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, எப்போது, எங்கு எடுக்கப்பட்டது, மோடியை சந்தித்தவர்கள் யார் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
வீடியோ பார்க்க:-
बच्चों के साथ बच्चे बन जाते हैं मोदी जी… pic.twitter.com/UUOXT5oouX
— BJP (@BJP4India) November 16, 2023