Shocking video of Delhi cop hit by car வேகமாக வந்த கார் தடுப்புகளை உடைத்து காவலர் மீது மோதிய அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
Delhi cop hit by car காவலர் மீது மோதிய கார் சிசிடிவி வீடியோ
டெல்லியில் கார் ஒன்று மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
வைரல் வீடியோவில் கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாகன சோதனை பணியை செய்துகொண்டிருந்துள்ளார்.

அபோது வந்த காரில் உள்ள நபருடன் போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்தக் காயமடைந்த போலீஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்த மற்ற போலீசார் விபத்தை ஏற்படுத்திய எஸ்யூவி காரைத் பின்தொடர்ந்து துரத்திச் சென்று, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோ பார்க்க:-