சுண்டைக்காயில் இத்தனை நன்மைகளா
ஆங்கிலத்தில் துருக்கி பெர்ரி (Turkey Berry) என்று அழைக்கப்படும் சுண்டக்காய் புதர் போன்ற செடியில் வளரும் சிறிய அளவிலான காய்கறி ஆகும். சுவையில் சிறு கசப்பு தன்மை கொண்ட இந்த சுண்டைக்காய் காய்கறியிலேயே மிகச் சிறியதாகும். அலவில் சிரியதாக இருந்தாலும் சுண்டைக்காயில் இத்தனை நன்மைகளா என்பது போல் பல நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டது இந்த சுண்டைக்காய்
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
பல சத்துக்கள் நிறைந்த இந்த சின்ன காய்க்காயை (storehouse of nutrients) அதாவது சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்றும் கூறப்படுகிரது.
கால்சியம், புரதம், இரும்பு போன்ற சத்துக்கல் அதிகமாக காணப்படும் இந்த சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கம்
பினைல்கள், குளோரோஜெனின்கள் உள்ள சுண்டைக்காய் இரைப்பையில் ஏற்படும் அழற்சி, கணையத்தில் ஏற்படும் புண்களை குறைக்கும்.
100 கிராம் சுண்டைக்காயில் சுமார்
*22.5 மில்லி கிராம் இரும்புச்சத்து,
*390 மில்லி கிராம் கால்சியம்,
*180 மில்லி கிராம் பாஸ்பரஸ் உள்ளது.storehouse of nutrients
வயிறு பிரச்சனைகளை குணமாக்
அடிக்கடி உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வது வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவும்.
சுண்டைக்காயை குழந்தைகளுக்கு சிறு வயது முதல் இருந்தே கொடுத்து பழக வேண்டும் , இது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடியது ஆகும்.
சுண்டைக்காயில் சிறு கசப்பு சுவ காரணாமாக தவிர்க்கும் குழந்தைகளுக்கு சாம்பர் செய்து அதில் சிறுது நெய் உற்றி கொடுக்கலாம்
காய்ச்சலை குணமாக்க:
சுண்டைக்காய் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கு தன்மை கொண்ட இது காய்ச்சலை விரைவில் குணமாக்குகிறது எனவே காய்ச்சல் வரும் சமயங்களில் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தோல் பிரச்சனை குணமாக:
உடல் அரிப்பு , அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு சுண்டைக்காய் சிறந்ததாகும்.
மூலம் குணமாக:
மூலம் பிரச்சனையால் அவதி படுபவர்கள் சுண்டைக்காயை நெய்யில் வறுத்து சாப்பிடுவர மூலத்தினால் ஏற்படும் சூடு, வயிற்றுக்கடுப்பு குணமாகும் . மேலும் மூலத்தினால் ஏற்படும் ரத்த கசிவும் நிற்கும்.
சர்க்கரை நோயை கட்டுபடுத்த:
காய்ந்த சுண்டக்கயை நெய்யில் வாறுத்து பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும மேலும் சர்க்கரை வியாதியால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம் ,வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சனைகல் குணமாகும்.
மேலும் பல நன்மைகள்:
உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வதால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும். மேலும் வாய்வு கோளாறையும் நீக்குகிறது.
காய்ந்த சுண்டைக்காயை நல்லெண்ணையில் வறுத்து வத்த குழம்பாக சாப்பிட்டு வர ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சு சளி குணமாகும்
சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது அது உடலில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் உள்ள கழிவுகளை நீக்கி புதுப்பிக்கும் தன்மை கொண்டது.
ரத்தசோகைக்கு சுண்டக்காய் அருமருந்தாக உள்ளது.
சமைக்கும் முறை
பச்சை சுண்டைக்காயை நன்றாக கழுவி அதை ஒன்று- இரண்டாக இடித்து கொள்ளவும் பின் மீண்டும் நன்றாக கழுவி எண்ணையில் வெங்காயம் தக்காலி மிலகாய் இஞ்சி சிறிது புளியுடன் சுண்டைக்காயை வதக்கி பின் அரைத்து சட்னியாக சாப்பிடலாம்அல்லது சாம்பாராக, குழம்பாக, கூட்டாக சமைக்கலாம்.
பச்சை சுண்டைக்காய் கிடைக்காத போது கடைகளில் சுண்டைக்காய் வற்றலாக வாங்கி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் கழிவுகள் நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கலாம்.