cauliflower chutney recipe 10 நிமிடத்தில் சுவையான காலிஃபிளவர் சட்னி செய்வது எப்படி

10 நிமிடத்தில் சுவையான காலிஃபிளவர் சட்னி செய்வது எப்படி
காலிஃபிளவர் வைத்து சுலபமாக சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காலிஃபிளவர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
காலிபிளவர் – 1/2 கப் (10 துண்டுகள்)
வெங்காயம் – 1
தக்காளி – 1
கடளை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை
கடுகு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு

செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி , அதில் சிரிது உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து காலிஃபிளவர் துண்டுகச்ச்ச்ளை அதில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடளை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதனுடன் , நறுக்கிய வெங்காயம், தக்காளி ,காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி வேக வைத்த காலிஃபிளவர். சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தேவையான அலவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த சட்னியை நைசாக அரைக்க தேவை இல்லை சிரிது கொர-கொரப்பாக அரைத்தாலே போதும்.
பிறகு கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து, அறைத்த காலிஃப்ளவர் சட்னியில் சேர்க்க்வும் . இப்போது சுவையான சூப்பரான காலிஃப்ளவர் சட்னி தயார். இந்த சூப்பரான காலிஃப்ளவர் சட்னியை சூடான இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
click here வாயில் பாம்பை பிடித்து கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் மரணம் வைரல் வீடியோ
cauliflower chutney recipe