recipes

crab omelette recipe சுவையான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி – 5 நிமிடத்தில் செய்யலாம்

crab omelette recipe சுவையான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?

crab omelette recipe
crab omelette recipe

தேவையான பொருட்கள்:-

சுத்தம் செய்த நண்டு- 3

பெரிய வெங்காயம் (நறுக்கியது)- ஒன்று,

தட்டிய சின்ன வெங்காயம்- 4,

இஞ்சி, பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,

மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்,

சீரகத்தூள், மல்லித்தூள்- தலா ஒன்றரை டீஸ்பூன் ,

சோம்புத்தூள், மஞ்சள் தூள்- தலா கால் டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை- சிறிதளவு,

உப்பு- தேவையான அளவு.

ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:-

முட்டை-3

தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

செய்முறை :-

சுத்தம் செய்த நண்டையும் அத்துடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சீரகம் சோம்பு என அனைத்து பொருட்களையும், வாணலியில் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நண்டு நன்றாக ஆறியபின், நண்டு துண்டுகளின் சதை பகுதியை பிரித்தெடுக்கவும். பின்னர் நண்டு வேகவைத்த தண்ணீரை கிரேவி பதம் வரும்வரை வற்ற வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டை, நண்டின் சதைப்பகுதி, 2 டேபிள்ஸ்பூன் நண்டு வேகவைத்த கிரேவி மற்றும் சிறிதளவு உப்பு(தேவைப்பட்டால்) சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் விட்டு நண்டு, ஆம்லெட் கலவையை உற்றி இருபுறமும் புரட்டிபோட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும். இப்போ நண்டு ஆம்லெட் ரெடி. 

சுவையான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி
சுவையான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி

crab omelette recipe

Related Articles

Back to top button