Homemade KFC Chicken recipe கேஃஎப்சி ஸ்டைலில் மொறு மொறு சிக்கன் ப்ரை வீட்டில் செய்வது எப்படி
kfc chicken recipe at home வீட்டில் kfc மொறு மொறு சிக்கன் செய்வது எப்படி
மொறு மொறுப்பான கேஎப்சி சிக்கன் ஃப்ரை வீட்டில் செய்வது எப்படி
கேஃஎப்சி சிக்கனை நாம் கடைகளில் சாப்பிட்டு இருப்போம். அதற்காக, மணி கணக்கில் காத்திருப்போம். ஆனால், அதை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாருங்கள்.
அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான இந்த கேஃஎப்சி ஸ்டைலில் மொறு மொறு சிக்கனை வீட்டிலேயே சுலமான 6 ஸ்டெப்பில் நாம் செய்யலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கேஃஎப்சி ஸ்டைல் மொறு மொறு சிக்கனை விடுமுறை நாட்களில் கூலாக வீட்டிலே சுலமாக செய்து அசத்தலாம்
இனிமேல் உங்களுக்கு ப்ரைட் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே நாம் இந்த கேஃஎப்சி ஸ்டைல் மொறு மொறு சிக்கன் செய்யலாம்
தேவையான பொருட்கள்:-
சிக்கன் லெக் பீஸ் – 1 கிலோ தோல் ஊறிக்காமல் நன்றாக சுத்தம் செய்து வாங்கவும்
மைதா – 1 கிலோ
கான் பிளவர் மாவு – தேவையான அளவு
மோர்- 2 கப்
முட்டை வெள்ளை கரு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் தேவையான அளவு
மிளகுத்தூள் தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு
சோயா சாஸ்-தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
குளிர்ந்த தண்ணீர்- தேவையான அளவு
அஜினோ மோட்டோ தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:-
முதல் ஸ்டெப்:- முதலில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பின்பு வாங்கிய சிக்கனை அதில் முழுவதுமாக போட்டு நன்றாக ஊறவிடவும் , சுமார் 30 நிமிடம் ஊறினால் போதுமானது
இரண்டாவது ஸ்டெப்:- அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தேவை பட்டால் அஜினமோட்டோ சேர்த்து கொள்ளவும், பிறகு அதில் சிறிது மோர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். குறிப்பு:- விழுது போல் இருக்கவேண்டும்
மூன்றாவது ஸ்டெப்:- அடுத்து முட்டை வெள்ளைகருவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும் உப்பு தண்ணீரில் ஊற வைத்த சிக்கனை எடுத்து நன்றாக பிரட்டி எடுத்து அடுத்ததாக தனியாக நாம் தயார் செய்த அந்த மசாலாவில் முழுவதுமாக பிரட்டி எடுத்து நன்றாக தடவி விட வேண்டும்.
நாலாவது ஸ்டெப்:- அடுத்து நாம் மசாலா தடவிய சிக்கனை 3 முதல் 4 மணி நேரம் வரை ஃபிரீசரில் வைக்க வேண்டும். பின்பு பீரீசரில் இருந்து சிக்கனை எடுத்து குளிர்ச்சி போக 10 முதல் 15 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.
ஜந்தாவது ஸ்டெப்:- தனியாக ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ மைதாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் கான் பிளவர் மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் சிக்கன் பீஸ் ஒவ்வொன்றாக எடுத்து மைதாவில் பிரட்டி எடுத்து கொள்ளவும் அடுத்து அந்த சிக்கனை ஐஸ் வாட்டரில் முக்கி 5 விநாடி கழித்து எடுத்து மீண்டும் மைதாவில் நன்கு பிரட்டி எடுக்கவும் அதேபோல் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசி ஸ்டெப்:- பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்குங்கள் நன்கு காய்ந்த எண்ணெயில் ஒன்று அல்லது இரண்டு துண்டு சிக்கனை அதில் 5 நிமிடங்கள் வரை நன்றாக பொறித்து எடுக்க வேண்டும்.சிக்கன் துண்டுகளை எண்ணெய்யில் விட்ட உடனே திருப்பாதீர்கள்.
சிக்கனை எண்ணெயில் போட்ட பிறகு அதனை கிளறவோ, நகர்த்தவோ கூடாது. சிக்கன் துண்டுகள் பொன்னிறத்திற்கு மாறியவுடன் கடாயில் இருந்து எடுத்து விடலாம். இதேபோல், ஒவ்வொரு துண்டுகளையும் நன்றாக பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து சாஸ் மையோனிஸ், வைத்து தட்டில் வைத்து கொடுங்கள் அவ்வளவுதான்