sakkarai pongal seivathu eppadi சுவையான,தித்திப்பான ருசியான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி
sakkarai pongal in tamil பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி
sakkarai pongal seivathu eppadi சுவையான ,தித்திப்பான ருசியான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. தைத்திருநாளான பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டு அறுவடையை மக்கள் தொடங்குவர்.
இந்நன்நாளை தமிழர் திருநாள் என்றும் பொங்கல் திருவிழா என்றும் அழைப்பார்கள் இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 06.30 முதல் 07.30 வரை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கலாம் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த நேரம் கடந்து விட்டால் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யநல்ல நேரமாகும். எம கண்டம், குளிகை நேரம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினால் செல்வம் பெருகும் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.
இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான் பொங்கல் திருநாளன்று அனைவரது வீட்டிலும் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். மேலும் சர்க்கரை பொங்கல் என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் இல்லங்களில் எந்த சுப நிகழ்வு நடந்தாலும் வாழை இலையில் முதலில் வைக்கப்படுவது இந்த சக்கரை பொங்கல் தான். அப்படிபட்ட இந்த சர்க்கரைப் பொங்கல் செய்முறை குறித்து இங்கு காணலாம்.
சுவையான சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:- sakkarai pongal tamil
1. பச்சை அரிசி – 1 கப் . பச்சரிசியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பொங்கல் பச்சரிசி, மற்றொன்று மாவு பச்சரிசி. மாவு பச்சரிசி பலகாரங்கள் செய்வதற்கு தான் நன்றாக இருக்கும். எனவே கடையில் பொங்கல் செய்வதற்க்கு என கேட்டு புது பச்சரியாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.மேலும் பச்சரிசி நொய்யாக கிடைத்தாலும் வாங்கி கொள்ளலாம், அரிசியை நன்கு சுத்தமாக தண்ணீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2.வெல்லம் – 2 கப் (நன்றாக பொடியாக தட்டி வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் அதை வடிகட்டிக் கொள்ளுங்கள் ஏனென்றால் வெல்லத்தில் சிறிய கற்கள் மற்றும் மண் இருக்க வாய்ப்புள்ளது.பின் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொதிக்க விடும்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். சுவை நன்றான இருக்கும். அதேபோல் வெல்லம் வாங்கும்போது பாகு வெல்லம் என்று கேட்டு வாங்குங்கள்அது பொங்கலுக்கு நல்ல கலர் கொடுப்பதோடு இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும்.
3.பாசிப்பயறு – 1/4 கப் நன்கு சுத்தமாக தண்ணீரில் அலசி பாசிப்பருப்பைப் கடாயில் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
4. பால் – 2 கப்.
5.நெய் – 2 குழி கரண்டி அளவு (பசு நெய் பயன்படுத்தும் பொழுது சுவையும் மணமும் அதிகமாக கிடைக்கும்.)
6.தேங்காய் – 1/4 கப் துருவி எடுத்து சிறிது நெய் விட்டு வதக்கி தனியாக வைத்து கொள்ளுங்கள், தனியாக தேங்காய் சேர்க்காமல் நெய் விட்டு வதக்கி சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாகவும் பொங்கல் வாசனையாகவும் இருக்கும்
7.முந்திரி – தேவையான அளவு.
8.உலர்திராட்சை – தேவையான அளவு.
9.ஏலக்காய் – தேவையான அளவு.பொடியாக இருக்கவேண்டும்
10. சுக்குபொடி – 2 சிட்டிகை
11.உப்பு – 2 சிட்டிகை
12.பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை தேவையானால் சேர்த்து கொள்ளலாம் ,பொங்கலில் பச்சை கற்பூரம் சேர்த்தால் கோவிலில் கொடுக்கும் சர்க்கரைப் பொங்கல் போல் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை பொங்கல் செய்முறை:- sakkarai pongal recipe in tamil
ஸ்டெப் 1:- முதலில் பொங்கலோ பொங்கல் எனகூறி அடுப்பை பற்ற வைக்கவும் அதன்பின்பு பொங்கல் பாத்திரத்தை எடுத்து அதில் பச்சை அரிசியையும் பாசிப் பயறையும் ஒன்றாக சேர்த்து பால் ஊற்றி வேகவைக்க வேண்டும். தண்ணீர் மட்டும் ஊற்றி வேகவைப்பதை விட பால் ஊற்றி வேக வைத்தால் மிகவும் சுவையாகவும் நல்ல குழைவாகவும் பொங்கல் இருக்கும், அதேபோல் அரிசி பொங்கி வரும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி சூரிய பகவானுக்கு நன்றி கூறவும்
ஸ்டெப் 2:- அடுத்து அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து குழைந்து வரும் போது இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் அதன் பின்பு தயாராக உள்ள வெல்லபாகை எடுத்து அதில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலக்கவும். அதன்பின்பு பொங்கல் நன்றாக குழைந்து இட்லி மாவு பதத்தில் வரும் போது ஏலக்காய் பொடி, சுக்குபொடி,அதில் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 3:- அடுத்து அடுப்பில் தனியாக ஒரு சிறிய கடாய் வைத்து இரண்டு குழிகரண்டி நெய் விட்டு நெய் நன்றாக சூடான பிறகு முதலில் திராட்சையை நன்றாக பொறித்து கொள்ளுங்கள் அதன்பின்பு அதனுடன் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக பொன்நிறத்தில் வறுத்துக்கொள்ளவும். முதலில் திராடையை பொறித்தவுடன் முந்திரியை பொறிக்கவும்ன் என்றால் முதலில் முந்தியை போட்டு வதக்கினால் முந்திரி கருகிவிட வாய்ப்பு உள்ளது எனவே முதலில் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 4: அடுத்து முந்திரி திராட்சையை நெய்யுடன் இறக்கி வைத்த சர்க்கரை பொங்கலில் சேர்த்து நன்றாக கலக்கிய பின்பு .அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இறுதியாக இரண்டு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் டேஸ்டான சூடான சுவையான மணமான சர்க்கரை பொங்கல் ரெடி.
அப்பறம் என்ன படையல் போட்டு சாமி கும்பிட்டு விட்டு சூடாக எடுத்து சாப்பிடுங்க, அவ்வளவு அருமையா இருக்கும்,
sakkarai pongal seivathu eppadi
More Details Click Here