ranji trophy free entry chepauk stadium சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ரஞ்சி போட்டியை காண அனுமதி இலவசம்

ranji trophy free entry chepauk stadium சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ரஞ்சி போட்டியை காண அனுமதி இலவசம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சி டிராபி போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான ரஞ்சி டிராபி போட்டி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது

இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த ரஞ்சி கோப்பை போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.மேலும், பார்வையாளர்கள் C,D,E ஸ்டாண்ட்ஸ் இருக்கைகளில் அமர்ந்து இலவசமாக போட்டியை காணலாம் என தெரிவித்துள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள 4வது நுழைவாயில் வழியாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல் அறிவித்துள்ளது.