Womens T20 cricket மகளிர் கிரிக்கெடில் நடுவர் மாற்றி சொன்ன முடிவால் சிரிப்பலை வைரல் வீடியோ
மகளிர் டி20 கிரிக்கெட் அம்பயர் வைரல் வீடியோ

Womens T20 cricket மகளிர் கிரிக்கெடில் நடுவர் மாற்றி சொன்ன முடிவால் சிரிப்பலை வைரல் வீடியோ.தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் இரு அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதில் தென் ஆப்பிரிக்கா 45 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள்லும் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 29.3 ஓவர்களில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் கள நடுவர்களாக கிளாரி போலோசாக் மற்றும் எலோயிஸ் ஷெரிடன் இடம் பெற்றிருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது 23-வத ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கார்ட்னர் பந்து வீச, சுனே லூசுக்கு எல்பிடபிள்யூ அப்பில் கேட்டக்கப்பட்டது.
கள நடுவரான கிளாரி போலோசாக் நாட் அவுட் கொடுத்தார் உடனே ஆஸ்திரேலியா அணி ரிவ்யூ கேட்டது. முடிவில் பந்து ஸ்டெம்ப்பின் ஆப் சைட் சென்றது. இது மைதானத்தில் இருந்த திரையில் தெளிவாக தெரிய, இதனை பார்த்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சோகமாக சென்றனர். அப்பொது உடனே நடுவர் கிளாரி போலோசாக் யாரும் எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார். இதனால் மைதானத்தில் இருந்த வீராங்கனைகள் சிரித்தனர். இதனை உணர்ந்த நடுவர் சிரித்து கொண்டே முடிவை மாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Womens T20 cricke
வீடியோ பார்க்க: