heavy rain school holiday கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உள்பட 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழகத்திற்க்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் 04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:-
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (04.11.2023) விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு