3 new Wild Card Entry In Bigg Boss 7 tamil பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. யார் யார்? தெரியுமா
Wild Card Entry In Bigg Boss 7 பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்கள்
3 new Wild Card Entry In Bigg Boss 7 tamil பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் மூன்று புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. யார் யார்? தெரியுமா பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
bigg boss 7 tamil பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ்,வெளியேறினார் அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அதற்க்கு அடுத்து விஜய் வர்மா வெளிறினார் அதற்க்கு அடுத்து யுகேந்திரன் , அதற்க்கு அடுத்த வாரம் வினுஷா வெளியேறினார்கள், அதற்க்கு அடுத்த வாரம் அன்னபாரதி வெளியேறினார் மீண்டும் அதே வராம் யாரும் எதிர்பார்க்காதவகையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பபட்டார் ,அதற்க்கு அடுத்ததாக ஜஷூ வெளியேறினார் ,மேலும் கடந்த வாரம் கானா பாலா வெளியேறினார் .
இது வரை பிக் பாஸ் வீட்டில் , gana bala,Ayshu Annabharathi Pradeep Vinusha Yugendran Vijay Bava Ananya ஆகியோர் வெளியேறி உள்ளார்கள் இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கானா பாலா, அர்சனா, பிராவோ,தினேஷ், அன்னபாரதி ஆகைய ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர். அதில் அன்னபாரதியும், கானாபாலாவும் வெளியேறிவிட்டார்கள்
இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் ஏற்கனவே வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு மூன்று கடுமையான போட்டியை வைக்க போகிறாராம் பிக் பாஸ். இதில் வெற்றிபெற்றால், மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வரமாட்டார்கள் ஒரு வேளை வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த கடுமையான போட்டியில் தோற்றுவிட்டால், புதிதாக மூன்று வைல்டு கார்டு நபர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என அறிவித்துள்ளார். அதாவது தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் ஏற்கனவே எலிமினேஷன் ஆன மூன்று போட்டியாளர்கள் உள்ளே வரப்போவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
அந்த மூன்று போட்டியாளர்களுடன் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் மூன்று டாஸ்க்கில் விளையாட வேண்டும் என்றும் அந்த மூன்று டாஸ்க்கில் வெளியே இருந்து வந்தவர்கள் ஜெயித்துவிட்டால் அவர்கள் உள்ளே தொடர்ந்து இருப்பார்கள் என்றும் அதற்கு பதிலாக உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் 3 போட்டியாளர்கள் யார் புதிதாக வரும் போட்டியாளர்கள் யார் என பலரும் எதிர்பார்த்து உள்ளார்கள்

மேலும் இதற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்களில் இருந்து மூவரை தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளார்களாம். இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் அவர் மீண்டும் வர வாய்ப்பில்லை. அதேபோல் பவா செல்லதுரையும் பாதியிலேயே வெளியேறியதால் அவரும் வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஐஷூவும் மீண்டும் வர வாய்ப்பில்லையாம். அதில் எஞ்சியுள்ள அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்ன பாரதி ஆகியோரில் மூவர் தான் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வர உள்ளார்களாம். இதில் அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா ஆகியோர் உள்ளே வர அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.