TamilNadu News
3 people were killed by train near tiruvallur திருவள்ளூர் அருகே ரயில் மோதி மூன்று பேர் உயிரிழப்பு
ரயில் மோதி மூன்று பேர் உயிரிழப்பு
3 people were killed by train near tiruvallur திருவள்ளூர் அருகே ரயில் மோதி மூன்று பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டியில் , தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர், மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலானது வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் ரயில் செல்லும் போது தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்

சம்பவம் அறிந்து வந்த போலிசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள், மேலும் திருவள்ளூர் இருப்புபாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றார்கள்
