advertises himself on banner for marriage மனைவியை கண்கலங்காம பார்த்துப்பேன்… பேனர் அடித்து விளம்பரம் – பெண் தேடும் ஓட்டுநர் முழு விவரம்
advertises himself on banner for marriage மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் மனைவி வேண்டும் என விளம்பரம் செய்துள்ளது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான தீபேந்திர ரத்தோர்.
இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது ஆட்டோவில் பேனர் அடித்து மனைவி தேவை என ஒட்டியுள்ளார் மேலும் அதில் பிறந்த தேதி, தனது உயரம், பிறந்த நேரம், ரத்தப்பிரிவு, கல்வித் தகுதி, அவரது குலம், கோத்திரம் உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு பேனரை தனது ஆட்டோவில் அவர் பொருத்தியுள்ளார்.
தற்போது செல்லும் இடங்களில் எல்லாம் இவரது இந்த பேனர் கவனத்தை ஈர்த்து வருகிறது. தனக்கு சாதி, மத வேறுபாடுகள் கிடையாது எனவும், எந்த பெண்ணும் தன்னை திருமணத் திட்டத்துடன் அணுகலாம் எனவும் ரத்தோர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனக்கு கிடைக்கும் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து பார்த்துக் கொள்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.