TamilNadu News

Amaran movie review ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய அமரன் பட விமர்சனம்

Amaran movie review ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர்கள்:-

சிவ கார்த்திகேயன்

சாய் பல்லவி

கீதா கைலாசம்

பூவன் அரோரா

ராகுல் போஸ்

இசை:- ஜிவி பிரகாஷ்

Amaran movie review
Amaran movie review

கதை:-

Amaran movie review ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார் மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து, அவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவத்தில் அவரின் பங்களிப்பு என அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் வார்த்தைகள் மூலமாகவும், அவரின் வலிகளின் மூலமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேஜர் முகுந்த் வரதஜானனின் வீரமரணத்தைத் தொடர்ந்து இந்திய அரசு அவருக்கு அசோக சக்கரா விருது அறிவித்தது.

முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார்.இந்து தனது காதலை தனது வீட்டில் தெரிவிக்கிறார். ராணுவத்தில் வேலைப்பார்ப்பவருக்கு தனது பெண்ணை கல்யாணம் செய்துதர மறுக்கிறார் இந்துவின் அப்பா. அவரை சம்மதிக்க வைத்து இந்துவும் முகுந்தும் திருமணம் செய்துகொள்வது வரை முதல் பாதி முடிகிறது.

காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட் இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். காஷ்மீரில் தீவிரவாத கும்பலின் படைத்தலைவனான அல்தாஃப் வானியை பிடிக்கும் முயற்சியின் போது முகுந்த் உயிரிழக்கிறார்.

CLICK HERE

Related Articles

Back to top button