attack on women dsp in aruppukottai அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் 7பேர் கைது அதிர்ச்சி வீடியோ

அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் 7பேர் கைது அதிர்ச்சி வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளி குமார் (35) சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று தனது சரக்கு வாகனத்தில் திருச்சுழியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது , திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே சென்றபோது இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காளி குமாரை திடீரென கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காளிகுமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார, அவ்வழியாக சென்ற சிலர் காளி குமாரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார். இதனையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காளி குமாரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை DSP காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்டவ்ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென DSP காயத்ரியை தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்டார். அவரை அப்புறப்படுத்த முயன்ற போது அந்த நபர் பெண் DSPயை தாக்கினார். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதில் ஒருவர் DSP காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர்.இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் DSP காயத்ரியை மற்ற காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
பெண் DSP மீது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் தொடர்பாக விருதுநகர் எஸ்பி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதிர்ச்சி வைரல் வீடியோ:
attack on women dsp in aruppukottai