Ayodhya Ram temple inauguration ராமர் கோயில் திறப்பு விழா
பகவான் ராமர் புகைப்படம் & வீடியோ பார்க்க
Ayodhya Ram temple inauguration ராமர் கோயில் திறப்பு விழா உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோவில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடந்துவருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார்.இந்த விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், துறைசார் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் ராமர் கோவில் பகவான் ராமர் புகைப்படமும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Ayodhya Ram temple inauguration
இன்று நடக்க உள்ள நிகழ்ச்சிகள்:
மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்குகிறது
கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது
இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்;
இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார்
விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள் உள்பட, 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்
10 ஆயிரத்துக்கும் அதிகமான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கள், அசம்பாவிதங்களை தடுக்க நீச்சல் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Ayodhya Ram temple opening ceremony
வீடியோ பார்க்க: