TamilNadu News

B.ed பி.எட் படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது அரசானை நகல் இணைப்பு

பி.எட் படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் – இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் 
 
இடைநிலை ஆசிரியர் நியமனம் – அதிரடி மாற்றம் பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது அரசிதழில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவிப்பு
பி.எட் படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது
பி.எட் படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது
 
ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்
 
இதற்கு முன்பு பி.எட் படித்தவர்களும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்த நிலை மாற்றம் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பு, பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி என்ற நடைமுறை
அமலில் இருக்கிறது ஓரிரு தினங்களில், 1000 இடைநிலை ஆசிரியர்
நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில்
விதிமுறைகள் மாற்றம்
 

பி.எட் படித்தவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்ற தகுதியற்றவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், பி.எட். பட்டம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவிக்கு நியமனம் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் என்று கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி உரிமை சட்டம் என்பது இலவசம் மற்றும் கட்டாயம் என்பது மட்டுமின்றி தரமான கல்வியையும் உள்ளடக்கியது என்று கருத்து தெரிவித்தனர்.

பி.எட் பட்டதாரிகள் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான பயிற்சியை பெறாத நிலையில், அவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது தரமான கல்வியை வழங்குவதில் சமரசம் செய்ததாக மாறிவிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.எனவே, தொடக்க கல்வியில் டிப்ளமோ படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் 2018 ஆம் ஆண்டு அறிவிப்பாணையையும் ரத்து செய்தனர்.

இடைநிலை ஆசிரியர் வேலைக்கு பி.எட் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது

Related Articles

Back to top button