bigg boss 7 title winner tamil பிக்பாஸ் 7 பட்டத்தை வென்ற அர்ச்சனா இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா
bigg boss 7 title winner tamil ப்BB7 டைட்டில் வென்றார் அர்ச்சனா! தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளரானார் அர்ச்சனா என்ற தகவல் இணையத்தில் வைரல் ஆகின்றது
பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து தற்போது 104 நாட்கள் உள்ளே இருந்து போட்டி முடிவடைந்து உள்ளது

இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ்,வெளியேறினார் அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அதற்க்கு அடுத்து விஜய் வர்மா வெளிறினார் அதற்க்கு அடுத்து யுகேந்திரன் , அதற்க்கு அடுத்த வாரம் வினுஷா வெளியேறினார்கள், அதற்க்கு அடுத்த வாரம் அன்னபாரதி வெளியேறினார் மீண்டும் அதே வராம் யாரும் எதிர்பார்க்காதவகையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பபட்டார் ,

அதற்க்கு அடுத்ததாக ஜஷூ வெளியேறினார், அடுத்து கானா பாலா வெளியேறினார், அதற்க்கு அடுத்து பிராவோ, அக்ஷயா வெளியேறினார்கள்விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ், மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றனர்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பணபெட்டியை யாருமே எடுக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் ஏறுவதும் குறைவதுமாக பணப்பெட்டி மாறிக்கொண்டிருந்தது.
இந்நிலையில் பூர்ணிமா ரவி தற்போது 16 லட்சம் ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்

இறுதியில் விஜய் வர்மா, மணி சந்திரா, மாயா கிருஷ்ணன், விஷ்ணு , தினேஷ்,அர்ச்சனா ஆகிய 6 போட்டியாளர்கள் இருந்தார்கள் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேறினார். தற்போது வீட்டிற்குள் மணி சந்திரா, மாயா கிருஷ்ணன், விஷ்ணு , தினேஷ்,அர்ச்சனா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் எந்த போட்டியாளர் அதிகமான வாக்குகளை பெறுவார்களோ அவர் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர்.
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அர்ச்சனா தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சூழலில் தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கும் சில அதிகாரப்பூர்வ தகவல்களைக் கொண்டு இந்த செய்தி இங்கு தரப்படுகின்றது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா அவர்கள் டைட்டில் வின்னராகி 50 லட்சம் ரூபாய் வென்றுள்ளதாக கூறப்படுகிறது நடன கலைஞர் மணிச்சந்திரா இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கிய அர்ச்சனா தற்பொழுது இந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறியுள்ளார் என்கின்ற தகவல் தற்பொழுது தீயாக பரவி வருகிறது.
யார் இந்த சீசன் வெற்றியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நாளை (ஜனவரி 14) அன்று ஒளிபரப்பாகவுள்ளது.எனவே யார் வெற்றியாளர் ஆகப்போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
