Bigg Boss Tamil 8 Elimination Week 1 பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய முதல் நபர் யார் தெரியுமா
Bigg Boss Tamil 8 Elimination Week 1 பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய முதல் நபர் யார் தெரியுமா
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய முதல் நபர் யார் தெரியுமா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எலிமினேட் ஆகிருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்
மேலும் பிக்பாஸ் வீட்டில்ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என வீட்டிற்க்கு நடுவே கோடு போட்டப்பட்டது, மேலும் பிக் பாஸ் சீசன் 8 முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித், அருண் ஆகியோர் இடம் பிடித்து இருந்தார்கள் இந்த நிலையில் முதல் வார எவிக்ஷனில் வெளியேறிய நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வார நாமினேஷனில் கடைசி மூன்று இடங்களை அருண் பிரசாத், ஜாக்லின், ரவீந்தர் தான் பெற்று இருந்தார்கள். அதில் அருண் பிரசாத் முன்னணியில் இருப்பதால் தப்பித்து விட்டார். ஜாக்குலின்-ரவீந்தர் ஆகிய இவர்களில் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் தான் எலிமினேட் ஆகி வெளியேறி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது
பிரபல பிக்பாஸ் ரிவியூவர் தன் டிவிட்டரில்
https://x.com/MSimath/status/1845143933849874457