bihar Gold bike தங்கத்தால் செய்யப்பட்ட பைக் வைரல் வீடியோ
Goldman of Bihar
bihar Gold bike தங்கத்தால் செய்யப்பட்ட பைக் வைரல் வீடியோ
பீகாரில் கோல்ட்மேன் என்று அழைக்கப்படும் நபர் தங்கத்தால் ஆன உதிரி பாகங்களால் செய்யப்பட்ட புல்லட் பைக்கை ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Prem Singh popularly known as ‘Goldman’ of Bihar for his hobby of wearing gold jewellery worth crores, rode a bike made up of gold.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பிரேம் சிங். இவர் சிறுவயது முதலே தங்க நகை மீது அலாதி ஆசை கொண்டதாகவும், அதனால் சிறுவயதிலேயே தங்க நகைகளை அணிந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.
பிரேம் சிங் தற்போது சுமார் 5 கிலோ 200 கிராம் தங்க நகைகள் அணிந்திருப்பதாக தெரிகிறது, அவரது கழுத்தில் மட்டும் சுமார் 4 கிலோ தங்க நகை அணிந்திருப்பதாககவும் அவர் அணிந்திருக்கும் தங்க நகையின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி என்றும் கூறப்படுகிறது இதனால் இவரை கோல்ட்மேன் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் அவர் தனது பைக்கையும் 200 கிராம் வரை தங்கத்தால் ஆன உதிரி பாகங்களால் அலங்கரித்துள்ளார். இந்த தங்க உதிரி பாகங்கள் கொண்ட பைக்கை அவர் பெங்களூரில் தயாரித்ததாகவும், மேலும் இதை உருவாக்க சுமார் 7 முதல் 8 மாதங்கள் வரை ஆனதாகவோம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தங்க உதிரி பாகங்கள் கொண்ட பைக்கை உருவாக்க சுமார் ரூ.12 லட்சம் வரை செலவானதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பைக்கை அவர் சாலையில் ஓட்டிச்செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.
bihar Gold bike
பைக் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும் CLICK HERE