TamilNadu Newstourisum

budget tour bus in Kumuli ரூ.380 கட்டணத்தில் குமுளியை சுற்றிபார்க்க வந்துவிட்டது பட்ஜெட் சுற்றுலா பேருந்து திட்டம் முழு விவரம்

 ரூ.380 கட்டணத்தில் குமுளியை சுற்றிபார்க்க வந்துவிட்டது பட்ஜெட் சுற்றுலா பேருந்து திட்டம் முழு விவரம்

தமிழக – கேரள எல்லையில்  சுற்றுலாத்தலமாக அமைந்துள்ள குமுளியில் சர்வதேச சுற்றுலாத்தலமாக  உள்ள தேக்கடிக்கு  உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்

budget tour bus in Kumuli
budget tour bus in Kumuli

 

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இங்கு படகு சவாரி, கதகளி, களரி, மோகினி ஆட்டம், ஜீப் மற்றும் யானை சவாரி, பசுமை நடை உள்ளிட்ட ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.

இந்த இடங்களை சுற்றிபார்க்க  பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வாடகை அல்லது  சொந்த வாகனங்களிலேயே செல்லும் நிலை இருந்து வந்தது மேலும் இது கூடுதல் செலவாக இருந்தது

குறைந்த செலவில் இடுக்கி மாவட்டத்தில் பல சுற்றுலாப்  பகுதிகளை சுற்றிப்பார்க்க பட்ஜெட் சுற்றுலா பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் சுற்றுலா பேருந்து திட்டம் 

பல்வேறு சுற்றுலா மையங்களை ஒருங்கிணைத்த கேரள அரசு போக்குவரத்துக் கழகம், ’பட்ஜெட் சுற்றுலா சிறப்பு பேருந்து’ இயக்கத்தைத் இன்று அறிமுகபடுத்தியுள்ளது .

இந்த பட்ஜெட் சுற்றுலா பேருந்தில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.380 (ticket) கட்டணமாக வசூலிக்கப்படும்.  தினமும் காலை 8 மணிக்கு குமுளியில் இருந்து கிளம்பும் இப்பேருந்து , பருந்துப்பாறை, வாகமன் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காண்பித்துவிட்டு மாலையில் இப்பேருந்து குமுளிக்குத் திரும்பும்.

சுற்றுலா பகுதிகள் பற்றி தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் விளக்கம் அளிக்கப்படும். இதில், (entry ticket) நுழைவு கட்டணம் உணவு உள்ளிட்ட இதர செலவுகள் சுற்றுலா பயணிகளைச் சார்ந்தது.

budget tour bus in Kumuli

Related Articles

Back to top button