TamilNadu News

bus strike in tamilnadu ஜனவரி 9 ம்தேதி முதல் ஸ்ட்ரைக் போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு முழு விவரம்

TN Govt transport union workers strike

bus strike in tamilnadu ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளார்கள் பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக AITUC, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது

தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்டம் எனவும் ஜனவரி 9 ம் தேதி முதல் ஸ்டைரக் போராட்டம் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில் மீண்டும் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் போக்குவரத்து துறை மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த தொழிற்சங்கத்தினர் வருகின்ற ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

tamil nadu bus strike News
tamil nadu bus strike News

அதன்படி சிஐடியு , ஏஐடியுசி அண்ணா தொழிற்சங்கம் என பிரதான தொழிற்சங்கங்கள் அனைத்தும் வருகின்ற ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துத்துறை உத்தரவு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு ஆஜராக வேண்டும்; பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு, போன்ற எந்த விடுப்புகளையும் பணியாளர்கள் எடுக்கக் கூடாது; சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் – போக்குவரத்துத்துறை ஆணை

bus strike in tamilnadu

Related Articles

Back to top button