TamilNadu NewsCINEMA

captain vijayakanth death பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்..! போக்குவரத்தில் மாற்றம் முழு விவரம்

captain vijayakanth death பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்..! போக்குவரத்தில் மாற்றம் முழு விவரம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அவரது இல்லமான சாலிகிராமத்தில் வைக்கப்பட்டது அதன்பின்பு பொதுமக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது.

captain vijayakanth death

இந்நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது. பிறகு தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தீவுத்திடலில் தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் தீவுத்திடலுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

தீவுத்திடலில் விஐபி-கள், திரைப் பிரபலங்கள், அமைச்சர்கள் வருவதற்கு தனிப்பாதையும், தொண்டர்கள் ரசிகர்கள் விரைவாக அஞ்சலி செலுத்துவதற்காக தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

2,000 இருக்கைகளும், விவிஐபி-கள் அமர தனியாக 100 இருக்கைகளும் போடப்பட்டுள்ளன; தீவுத்திடலை சுற்றி 15 இடங்களில் நடமாடும் கழிவறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அமர்வதற்காக 1000க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

captain vijayakanth death news
captain vijayakanth death news

போக்குவரத்து மாற்றம்:-

காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜ சாலை, நேப்பியர் பாலம், தீவு மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலைக்கு நுழையும் கொடி ஊழியர்கள் சாலையில் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல பேருந்துகள் அண்ணா சிலை அருகிலும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது. கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

captain vijayakanth death

 

CLICK HERE

Related Articles

Back to top button