chennai beach tambaram electric train cancelled list சென்னை, தாம்பரம், செங்கல்பட்டில் நாளை 53 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம் இதோ
electric train cancelled நாளை 53 ரயில்கள் ரத்து தெற்க்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை அக்டோபர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலாலன மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வர முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயிகள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05க்கு புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 10 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
சென்னையில் – தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள்
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும்,
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள்
காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 11 முதல் பிற்பகல் 2.20 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. என தெற்கு ரயில்வே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.