TamilNadu News

coimbatore waste house அடுக்குமாடி குடியிறுப்பில் டன் கணக்கில் குப்பைகளுடன் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தாயும் மகளும் வீடியோ

coimbatore waste house அடுக்குமாடி குடியிறுப்பில் குப்பைகளுடன் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தாயும் மகளும் வீடியோ 

கோவையில் காட்டூர் என்னும் இடத்தில் இரண்டு பெண்கள் பல வருடங்களாக வீட்டின் குப்பையை அகற்றாமல் அதில் வாழ்ந்து வந்த தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் பக்கத்து வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர்.

coimbatore waste house
coimbatore waste house

அது குறித்து அங்கு சென்ற மாநகரட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அச்சம்பவம் குறித்து விசாரித்த போது,15 வருடங்களாக தாய் மற்றும் மகள் வீட்டை சுத்தம் செய்யாமல் வாழ்ந்து வந்ததுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் தாயும் மகளும் ஆவார்கள் தாயார் பெயர் ருக்மிணி, அவருக்கு வயது 60, மற்றொருவர் அவரது மகள் திவ்யா, அவருக்கு 40 வயது. இருவர் மட்டுமே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.பல ஆண்டுகளாக வீடு சுத்தம் செய்யப்படாததால், வீடு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அதன் உள்ளே எறும்புகள், கரையான்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எலிகள் என பல பூச்சிகள் குடியிருக்கின்றன.

15 வருடத்திற்கு முன் கணவர் இறந்த பின் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்ததால் வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்துள்ளார்கள்.

பார்சல் உணவுகளை வாங்கி உண்றுவிட்டு அந்த குப்பைகளையும் அகற்றாமல் அதில் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்கள் வீட்டில் டன் கணக்கில் குப்பையை மாநகராட்சி அகற்றியுள்ளனர் . இரு பெண்களையும் மாநகராட்சியினர் மீட்டு அவர்களின் வீட்டை சுத்தும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

coimbatore waste house

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 

 

Related Articles

Back to top button