CSK Vs RCB Score சென்னை அணி அபார வெற்றி முழு விபரம்
CSK Vs RCB Score 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய நிலையில், பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர்.இதில் அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய படிதார், மேஸ்வெல் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து கோலி 21 ரன்னிலும், க்ரீன் 18 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் பெங்களூரு அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களக கேப்டன் கெய்குவாட், ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர். கெய்குவாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் ஆட்டமிழ்து வெளியேறினர்.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சென்னை அணி 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிபெற்றது. ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். பெங்களூரு தரப்பில் அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
CSK Vs RCB Score
MATCH HIGH LIGHTS CLICK HERE