customer sets fire to ola showroom அடிக்கடி ரிப்பேர் ஆன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அத்திரத்தில் ஷோரூமை கொளுத்திய வாடிக்கையாளர்

அடிக்கடி ரிப்பேர் ஆன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அத்திரத்தில் ஷோரூமை கொளுத்திய வாடிக்கையாளர்
கர்நாடகா, மாநில கலபுர்கி நகரில் ஓலா ஷோரூம் Ola Showroom ஒன்று இயங்கி வருகிறது.இந்த ஷோரூமில் முகமது நதீம்(26) என்பவர் கடத்த மாதம் ரூ.1,40,000 கொடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Electric Scooter ஒன்றை வாங்கியுள்ளார்.
வாங்கிய 2 நாட்களிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி மற்றும் சவுண்ட் சிஸ்டமில் தொழில்நுட்ப ரீதியாக கோளாறு ஏற்பட்டுள்ளது . எனவே ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய ஓலா ஷோரூம்க்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்

ஆனால், ஓலா ஷோரூமில் வேலைபார்த்த ஊழியர்கள் அவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த முகமது நதீம் ஷோரூமிற்கு பெட்ரோல் கேனுடன் சென்று தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தினால் , ஷோரூமில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 6 வாகனங்கள் மற்றும் கணினிகள் தீயில் எரிந்தன. சுமார் 8,50,000 மதிப்பிலான பொருட்கள் நெருப்பில் கருகி நாசமாகின.
பின்னர், தீ வைத்து கொளுத்திய முகமது நதீம் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.