NATIONAL NEWSTamilNadu News

cyclone hamoon வங்கக்கடலில் உருவாகும் புயல் பெயர் ஹாமூன் – தமிழகத்திற்க்கு பாதிப்பா?

bay of bengal cyclone hamoon in tamil வங்ககடலில் உருவாகும் ஹாமூன் புயலால் பாதிப்பு யாருக்கு

cyclone hamoon வங்கக்கடலில் உருவாகும் ஹாமூன் புயல் தமிழகத்திற்க்கு பாதிப்பா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வரும் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

cyclone hamoon
cyclone hamoon

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில்:-

அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று புயலாக வலுப்பெற்றது. நாளை (22-ந் தேதி) மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். பின்னர், வரும் 24-ந்தேதி தெற்கு ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை மறுநாள் (23-ந் தேதி) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24ம் தேதிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.காற்று வீசும் வேகத்தை பொறுத்து, புயல் உருவாகுமா என்பது தெரியவரும். புயல் உருவானால், ஈரான் நாடு வழங்கியுள்ள, ஹாமூன் என்ற பெயர் சூட்டப்படும்.

இந்த பெயரை ஈரான் நாடு வழங்கி உள்ளது.ஹாமூன் புயலால் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்க வாய்ப்பு இல்லை. அது வங்கதேசம் நோக்கி நகரும் என்பதால் தமிழகத்திற்க்கு அதிக மழை கிடைக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Related Articles

Back to top button