cyclone michaung update வங்கக் கடலில் டிச 1ம் தேதி புயல் உருவாக உள்ளது – வானிலை ஆய்வு மையம்
michaung cyclone tracker மிக்ஜாம் புயல் எங்கு கரையை கடக்கும் முழு விவரம்
cyclone michaung update
வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
இன்று (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். இந்த புதிய புயலுக்கு மிக்ஜாம் MICHAUNG என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 27.11.2023 முதல் 29.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30.11.2023 முதல் 03.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
cyclone michaung update
Cyclone Michaung Live
இந்த மிக்ஜாம் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்
https://www.windy.com/?2023120109,10.704,81.914,5