TamilNadu News

DD tamil Oliyum Oliyum புதுப்பொலிவுடன் டிடி தமிழ் இன்று முதல் மீண்டும் ஒளியும் ஒலியும் ஒளிபரப்பு பார்க்க தயாரா மக்களே

DD tamil Oliyum Oliyum மத்திய அரசின் டிடி பொதிகை சேனல் புதுப் பொலிவுடன் இன்று முதல் டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதனைத் தொடங்கி வைத்தார் பொதிகை டிவி தற்போது புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற லட்சியத்துடன் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது.

வழக்கமான காலை 8 மணி செய்திக்குப் பின்னர், காலை 9 மணி, 10 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி, 3 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் தலா ஐந்து நிமிட விரைவுச்செய்திகள் புதிதாக இடம் பெற உள்ளன. மக்கள் மேடை விவாத நிகழ்ச்சி மாலை 6 மணிமுதல் இரவு 7 மணி வரை ‘எதிரும் புதிரும்’ என்ற தலைப்பில் இடம்பெறும். அதேபோல் தினமும் காலை 7.30 மணியலவில் ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பப்படவுள்ளது.

DD tamil Oliyum Oliyum
DD tamil Oliyum Oliyum

நாடகங்கள்:-

விகடன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து அளிக்கும் பட்ஜெட் குடும்பம் தொடர் இதில் சுஷ்மா நாயர், குறிஞ்சிநாதன் மற்றும் பலர் நடிக்கும் புதிய நெடுந்தொடர்.இன்று முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.

ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் வழங்கும் ‘தாயம்மா குடும்பத்தார் தொட்டரில் ராதிகா சரத்குமார், வேணு அரவிந், மஹாலக்ஷ்மி மற்றும் பலர் நடிக்கும் புதிய நெடுந்தொடர்.இன்று முதல் இரவு 8:30 மணிக்குஒளிபரப்பாகும்.

சுரேஷ் கிருஷ்ணா புரொடக்‌ஷென்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சக்தி ஐ.பி.எஸ் தொடர் ஸ்வாதிகா, தலைவாசல் விஜய், சுகன்யா மற்றும் பலர் நடிக்கும் புதிய நெடுந்தொடர் இன்று முதல் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும்.

கிருஷ்ணசுவாமி அசோசியேட்ஸ் தயாரித்துள்ள மகாகவி பாரதி ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது

வீடியோ பார்க்க:- https://twitter.com/DDNewsChennai/status/1748341038799069326

DD tamil Oliyum Oliyum

DD tamil
DD tamil

Related Articles

Back to top button