TamilNadu News

deepavali special bus from chennai தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்த பேருந்துகள் எங்கிருந்து செல்லும் – முழு விபரம்

diwali special bus தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கபடும்

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (09/11/2023 முதல் 11/11/2023 வரை)சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்
தீபாவளி சிறப்பு பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:-

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள். கே.கே. நகர் மா.போ.கழக பேருந்து நிலையம். ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்,

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ):-

திண்டிவனம் வழியாக கும்பகோணம். தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:-

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்துபட்டு. வந்தவாசி. செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி. நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி. கடலூர். சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் பூவிருந்தவல்லி மாநகரபோக்குவரத்துக் கழக பணிமனை அருகில்)

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம். செய்யாறு. ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்துநிலையம், கோயம்பேடு:-

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மயிலாடுதுறை. அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி. திருச்சி. மதுரை. திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி. திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, காரைக்குடி. புதுக்கோட்டை. திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு. ஊட்டி, இராமநாதபுரம், பெங்களூரு) சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்

அதேபோல் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம். பாண்டிசசேரி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும்.

மற்றும் ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. www.aoboa.co.in என்ற பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். என அறிவித்துள்ளது

Related Articles

Back to top button