TamilNadu News

diwali bus stand chennai தீபாவளிக்கு சொந்த ஊர் போகபோறீங்களா ?எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்? முழு விவரம் இதோ

Deepavali special buses எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்?

தீபாவளிக்கு சொந்த ஊர் போகபோறீங்களா ?எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்? முழு விவரம் இதோ

தீபாவளி பணிடிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் நவம்பர் 9ம் தேதிமுதல் 16 ஆயிரத்து 895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

diwali bus stand chennai
diwali bus stand chennai

 

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:-

ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ் பொன்னேரி கும்முடிப்பூண்டி ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.

கே.கே. நகர் மா.ந.போ.கழக பேருந்து நிலையம்:-

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் MEPZ:- திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் .

தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:-

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி , நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர் , சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்:-

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு:-

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள்

மூன்று நாட்களும் சென்னையில் இருந்து, 10 ஆயிரத்து 975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 920 பேருந்துகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்த பின், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு நவம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களும் 13 ஆயிரத்து 292 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

One Comment

  1. Always it is highly focussed in Chennai, there are somany bus stands in TN why not consider other cities like, Coimbatore, Madurai, Trichy and Salem. Many issues facing by the passengers in Coimbatore during the Festival. When you are telling the issue of transport diversions in TN, kindly cover other cities like Coimbatore

Back to top button