diwali gift fake links தீபாவளி கிப்ட் என வாட்ஸப்பில் பரவும் மோசடி லிங்க் யாரும் கிளிக் செய்யவேண்டாம்
Diwali gift scam இலவச தீபாவளி கிப்ட் என பரவும் போலி தகவல்கள் எச்சரிக்கையாக இருங்கள்
தீபாவளி கிப்ட் என வாட்ஸப்பில் பரவும் மோசடி லிங்க் யாரும் கிளிக் செய்யவேண்டாம் தற்போது வர இருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி GIFT, COUPON CODEகளை சிலர் ஷேர் செய்து வருகின்றார்கள்
ஆனால் அதிகாரபூர்வமாக நிறுவனங்கள் அறிவிக்காத நிலையில் சிலர் அந்நிறுவனத்தின் பெயரில் மோசடியாக பணமோசடி செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் வாட்ஸ்அப் குழுக்களில் இத்தகைய மெசேஜ் ஏதேனும் வந்தால், மக்கள் அதனை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம், நம்பி ஏமாற வேண்டாம். தற்போது பரவும் மோசடியான அந்த லின்ங் கிளிக் செய்தால் நீங்கள் அங்கு ஏமாற்றப்படுவீர்கள், அதில் உங்கள் விவரங்களையும் பதிவு செய்யவேண்டாம்

பிரபல நகைக்கடையான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், இது போன்ற லிங்குகளை தங்கள் நிறுவனம் அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனத்தின் 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பரிசு என போலி லிங்குகள் பகிரப்பட்டு வருவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு இலவச தீபாவளி பரிசுகளை வழங்குவதாக கூறி ஃபிஷிங் URLகளை அனுப்புகின்றன. அதில் பயனர்களின் தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குத் தகவல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசமான நோக்கத்துடன் அனுப்பப்படுகின்றன. இது போன்ற பிஷிங் இணையதளங்களில் உங்கள் விவரங்களை கொடுக்கவேண்டாம்
இதுபோன்ற பிஷிங் Website -களில் வரும் Link -களில் சென்று Cell No, Bank Account No, OTP, Debit/Credit Card/CW போன்ற எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிடவும். சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.